ipl: மும்பை இந்தியன்ஸ் அணியில் 6 ஆண்டுகளாக விளையாடி வரும் இஷான் கிஷன் இந்த முறை ஏலத்தில் வெளிவிட்டுள்ளது மும்பாய் இந்தியன்ஸ் வெளியான அதிர்ச்சி காரணம்.
ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் கடந்த மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த ஐ பி எல் தொடரானது அடுத்த மாதம் மார்ச்,ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் அணிகளை கட்டமைத்துள்ளது.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர் இஷான் கிஷானை இந்த முறை ஏலத்தில் எடுக்கவில்லை. இவர் கடந்த 6 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் நிலையில் அவரை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை தக்க வைக்கவில்லை ஏலத்தில் வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஏலத்தில் அணி நிர்வாகம் 3.20கோடி வரை மட்டுமே வாங்க முயற்சி செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை 11.25 கோடிக்கு வாங்கியது. இந்த ஏலத்திற்கு பிறகு அவர் மும்பை இந்திய அணி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பேசி வெளியிட்டார் ஆனால் இந்த பதிவிற்கு ஹர்திக் பாண்டியா மட்டுமே பதிலளித்தார்.
முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் லைக் கூட செய்யவில்லை இதற்கு காரணம் ஹர்திக் கேப்டன் ஆன பிறகு அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா என இரு குழுக்களாக இருந்த போது இஷான் கிஷான் ஹர்திக் க்கு சாதகமாக இருந்தார். அதனால் அவர் இந்த முறை வெளியேற்றப்பட்டு வாங்கப்படவில்லை என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.