‘கேம் சேஞ்சர்’ தோனி, நீக்கப்பட்டாரா ஹர்திக் பாண்டியா?

Photo of author

By Parthipan K

T 20 உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்க இருக்கின்றது.

இந்த போட்டியானது இந்திய அணிக்கு முக்கியமான ஒரு கட்டம். இந்த போட்டியில் வெற்றி அடையவில்லை என்றால் பெரும்பாலும் இந்தியா T 20 உலக கோப்பை தொடரிலிருந்து விலக நேரிடும்.

T 20 உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதியது. இதுவரை பாகிஸ்தானை வெற்றி கண்ட இந்திய அணி முதன்முறையாக பாகிஸ்தான் அணியிடம் தோற்றது.

இந்திய அணி பேட்டிங் ஒரு அளவுக்கு நன்றாக ஆடி 155 ரன்கள் எடுத்தாலும், பௌலிங் இல் அந்த அளவுக்கு சிறப்பாக பங்கெடுக்கவில்லை என்றே கூறலாம். இந்திய அணியால் பாகிஸ்தான் அணியிலிருந்து ஒரு விக்கட் கூட எடுக்க முடியவில்லை.

ரோஹித் ஷர்மாவின் விக்கட் இந்திய ரசிகர்களிடையே மிகப் பெரிய மனக்கலக்கத்தை கொடுத்தது. முடிவில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை கண்டது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் ஒரு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஷரத்துல் தாக்கூர் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. CSK அணியில் ஷரத்துல் தாக்கூர் பங்களிப்பை சிறப்பாக அளித்ததன் மூலம் தோனியின் பரிந்துரையினால் உலக கோப்பை ஆட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவார் என நினைத்திருந்த நிலையில், அவர் பயிற்சி ஆட்டத்தின் போது சிறப்பாக விளையாடிய காரணத்தினால் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருக்கின்றார்.

இதனால் இந்திய அணியில் கூடுதலாக உள்ள வேகப்பந்து வீச்சாளர் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், புவனேஷ்குமார் நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.