விரைவில் திருமணம்…. ஹரிஷ் கல்யாண் கரம்பிடிக்க போகும் பெண் இவரா?

0
300

விரைவில் திருமணம்…. ஹரிஷ் கல்யாண் கரம்பிடிக்க போகும் பெண் இவரா?

நடிகர் ஹரிஷ் கல்யாண் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிந்து சமவெளி படத்திலேயே அறிமுகம் ஆனாலும் ஹரிஷ் கல்யாணுக்கு பிரபல்யத்தைக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் நடிக்கும் படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது . அந்த வகையில் அவர் நடித்த பியார் பிரேமா காதல், ஓ மணப் பெண்ணே மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது அவர் டீசல் மற்றும் நூறு கோடி வானவில்  உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது ஹரிஷ் கல்யாணின் திருமனம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை இந்த மாத இறுதியில் கரம்பிடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்துவது போல ஹரிஷ் கல்யாண் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் திருமனம் செய்துகொள்ள உள்ள பெண் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் மென்பொருள் துறையை சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. ஹரிஷ் கல்யாண் இன்னும் மணப்பெண்ணின் புகைப்படத்தை பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இடையில் ஹரிஷ் கல்யாண் சில நடிகைகளைக் காதலிப்பதாக தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleவிக்ரம் கலெக்‌ஷனைத் தாண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இத்தனை நாட்கள் போதுமா?
Next articleபெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்த வாலிபர்! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here