கால் ஆட்டாதே குடும்பத்திற்கு ஆகாது? ஏன் பாட்டி இவ்வாறு சொல்கிறார்..!!

Photo of author

By Priya

Leg shaking in tamil: நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் இருக்கும் எப்பொழுதும் காலை ஆட்டிக்கொண்டே இருப்போம். இல்லையென்றால் கால் ஆட்டுக்கொண்டு இருக்கும் நபர்களையும் பார்த்திருப்போம். மொபைல் பார்த்து கொண்டு இருக்கும் போதோ, கம்பூட்டரில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போதோ, வேறு யாரிடமாவது பேசிக்கொண்டு உள்ளபோதோ, டிவி பார்க்கும் போது இந்த கால் ஆட்டும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும்.

அதிலும் வீட்டில் உள்ள பெண்கள் இவ்வாறு காலை ஆட்டிக்கொண்டு இருந்தால் போதும் நம் பாட்டியோ, அம்மாவோ பெண் பிள்ளை தானே ஏன் இவ்வாறு காலை ஆட்டிக்கொண்டு இருக்கிறார். இப்படி செய்தால் குடும்பத்திற்கு ஆகுமா? என சொல்லி திட்டிவிட்டு சென்று விடுவார்கள். காலை ஆட்டினால் ஏன்  குடும்பத்திற்கு ஆகாது என கூறுகிறார்கள்? அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று அவர்களிடமே கேட்டால், அது எல்லாம் எனக்கு தெரியாது காலை ஆட்டாதே என கூறிவிட்டு செல்வார்கள்.

காலை ஆட்டினால் ஏன் குடும்பத்திற்கு ஆகாது? எதற்காக அப்படி சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.

காலை ஏன் ஆட்டக்கூடாது?

இந்த கால் ஆட்டும் நோயை தான் ஆங்கிலத்தில் Restless Legs Syndrome (RLS) என்று கூறுகிறார்கள். இது ஓய்வான நிலையில் இருக்கும் போது காலை ஆட்ட வேண்டும் என்று தூண்டக்கூடிய நிலையாகும். நமது உடலை முழுவதும் மொத்தமாக சுமப்பது எதுவென்று பார்த்தால் கால் பாதம் தான். காலை ஆட்டுவதால் மூட்டுக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்படுகிறது. அதனால் கால் மூட்டு வலி வர வாய்ப்புள்ளது. கால் மூட்டுப்பகுதியின் சவ்வு தேய்வதற்கு காரணமாக அமைகிறது.

இந்த பிரச்சனை தற்போது வரவில்லை என்றாலும், வயதான பிறகு கட்டாயம் மூட்டு வலி வருவதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

நாம் ஓய்வு நிலையில் இருக்கும் போது, நம் கால் மட்டும் ஆட்டிக்கொண்டே இருந்தால் எனர்ஜி முழுவதும் குறைய வாய்ப்புள்ளது.

நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கிறீர்கள். இல்லையென்றால் முக்கியமாக ஏதாவது பேசிக்கொண்டு உள்ளீர்கள், வேலைப்பார்த்து காெண்டு இருக்கிறீர்கள் என்றால் உங்களையும் அறியாமல் நீங்கள் காலை ஆட்டிக்கொண்டு இருப்பீர்கள். இதனால் நீங்கள் செய்யும் செயலில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் போகும்.

இந்த கால் ஆட்டும் பழக்கம் உங்கள் தற்போதைய மனநிலையை பாதிக்கும் என்பதால் கால் ஆட்டாமல் ஒரு செயலை செய்தால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற தெளிவு கிடைக்கும்.

மேலும் காலை ஆட்டுவதால் உங்களுக்கு உடல் சோர்வு, மன அழுத்தம், கால் வலி ஏற்படும்.

மேலும் மூளைக்கு தகவல் செல்லும் நரம்புகளில் சுரக்கப்படும் வேதிப்பொருட்கள் பாதிக்கப்படும்.

மேலும் படிக்க: கால் மேல் கால் போட்டு உட்காரும் நபரா நீங்கள்? இதை கவனிக்காமல் விட்டால் ஆபத்து உங்களுக்கு தான்..!!