ஹாரி பாட்டர் படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!

0
99
#image_title

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!!

ஹாரி பாட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் 2004ம் ஆண்டு வெளியான ஹாரி பாட்டர் திரைப்படத்தில் புரபசர் ஆல்பஸ் டம்பிள்டோர் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவருடைய நடிப்பு ஹாரி பாட்டர் திரைப்படத்தில் சிறப்பாக இருந்தது. மேலும் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

ஐரிஸ் நடிகரான மைக்கேல் கேம்பன் அவர்கள் 8 பாகங்களாக வெளி வந்த ஹாரி பாட்டர் திரைப்படத்தில் முதல் 6 பாகங்களில் நடித்திருந்தார். முதல் ஆறு பாகங்களில் நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் தி ஓமன், தி லாஸ்ட் செப்டம்பர், சர்ச்சில்ஸ் சீக்ரெட், தி பேக்கர், தி குட் நைட், கிங் ஆஃப் தீவ்ஸ் உள்பட 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான ஜூடி, கார்டிலியா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

82 வயதான நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Previous articleதனிமையில் நான்… என்னை பார்க்க யாரும் வருவது கிடையாது… – மனம் திறந்த கனகராஜ்!
Next articleமார்க் ஆண்டனி படத்தை பார்க்கவே சென்சார் போர்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டனர்!!! நடிகர் விஷால் பரபரப்பு புகார்!!!