அண்ணாமலை முதல்வருக்கு கடும்கண்டனம்!! மருத்துவருக்கு கத்திகுத்து அரசின் மீது அவநம்பிக்கை!!

Photo of author

By Vinoth

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து புற்றுநோய் சிச்கிச்சை மருத்துவர் பாலாஜியை கத்தியில் கழுத்து, முதுகு, தலையில் குத்தப்பட்டுத் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த குற்றங்களை தடுக்கமுடியாமல் ஒவ்வொரு முறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலவர் கூறுவது மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மாதிரியான சம்பவங்கள் பலமுறை டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்களுக்கு நடந்ததுள்ளது. ஆனால் இந்த விடியா திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருகின்றது ஆனால் முதல்வர் ஒவ்வொரு முறையும் நடக்கும் போதும் எதும் நடவடிக்கை எடுபதில்லை. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம், நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த வாரம், திருச்சி இ.எஸ்.ஐ., மருத்துவமனை வளாகத்தில், டாக்டர் மீது தி.மு.க., உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதேபோல், மனநிலையால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் எதற்காக கொடூர செயலில் கத்தியால் தாக்கினான் என்ற உண்மை நிலையை கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி, டாக்டர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது தமிழக அரசின் கடமையாகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.