ஆசியக்  கோப்பை தொடர்… முக்கிய வீரர் விலகலா? இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Photo of author

By Vinoth

ஆசியக்  கோப்பை தொடர்… முக்கிய வீரர் விலகலா? இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் டி 20 போட்டிகளில் சிறப்பாக சமீபகாலத்தில் செயல்பட்டு வருகிறார்.

ஆசியக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுபோல காயத்தால் சில வீரர்கள் விலக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

அதில் கே எல் ராகுல் காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் அவர் காயமடைந்தார். அதனால் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இதனால் அவர் ஆசியக் கோப்பை தொடரிலும் இடம்பெற மாட்டார் என சொலல்ப்படுகிறது.

ஆசியக் கோப்பை தொடரில் குரூப் ஏ வில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ள நிலையில் இரு அணிகளும் மோதும் போட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆசியக்கோப்பைக்கான முழு அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணியாக இந்தியா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் இரு அணிகளும் மூன்று போட்டிகளில் மோத அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் முதல் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால், அடுத்த சுற்றில் இரண்டு முறைகள் மோதவேண்டிய சூழல் ஏற்படும். இதனால் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முறை மோத வாய்ப்புள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் டி 20 உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் மீண்டும் மோத உள்ளன.