மம்தாவை யாரேனும் தள்ளிவிட்டார்களா? விசாரணை கோறும் பாஜகவினர்? 

Photo of author

By Savitha

மம்தாவை யாரேனும் தள்ளிவிட்டார்களா? விசாரணை கோறும் பாஜகவினர்? 

Savitha

Has anyone ditched Mamata? BJP people demanding investigation?

மம்தாவை யாரேனும் தள்ளிவிட்டார்களா? விசாரணை கோறும் பாஜகவினர்?

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி தலைவர் மற்றும் முதல்வரான 69 வயதாகும் மம்தா பானர்ஜி தனது வீட்டில் தடுக்கி விழுந்ததால் முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

மேற்க்குவங்க முதல்வரின் இந்த நிலை மாநிலத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது தொடர்பாக மேற்குவங்க பாஜக பிரமுகர் சுகந்தா மஜ்ஜூம்தன் மம்தாவிற்க்கும் எங்களுக்கும் கருத்து வேறுபாடு  இருந்தாலும் அவர் எங்கள் முதல்வர் எனவே அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய விஷயம், தேவை ஏற்பட்டால் அவரை வேறு இல்லத்திற்க்கு மாற்றி அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால், மம்தாவை யாரும் தள்ளிவிடவில்லை அவர் மயங்கி கீழே விழுந்ததால் முகத்தில் அடிபட்டது என திரிணாமுல் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் விரைவில் குணமடைய வேண்டுமென பிரதமர் நரேந்திரமோடி, அரவிந்த் கேஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மல்லிகார்ஜுனா, ராகுல்காந்தி உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.