கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கு பாலியல் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்து வருகிறது.கணவன் மனைவி பிரிந்து வாழ்வது,உடல் நலக் கோளாறு போன்ற பல காரணங்களால் உடலுறவின் மீதான ஆசை மெல்ல மெல்ல குறையத் தொடங்குகிறது.
தற்போதைய தலைமுறை குழந்தை பிறப்பை தள்ளிப் போடுகின்றனர்.பணம் சம்பாதிக்க வேண்டும்,வீடு வாங்க வேண்டும்,நல்ல வேலைக்கு சென்று லைஃபில் செட்டிலாக வேண்டுமென்று குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதால் அவர்களுக்கு பாலியல் மீதான ஆர்வம் குறைகிறது.
நீண்ட காலம் பாலியல் உறவில் ஈடுபடாமல் இருந்தால் உடல் மற்றும் மனதளவில் கடுமையான தாக்கத்தை சந்திக்கக் கூடும்.நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடவில்லை என்றால் ஆண்குறி சுருங்கிவிடும்.
உடலுறவில் ஈடுபட்டு ஒரு மாதங்களுக்கு மேலானவர்களுக்கு பதட்டம்,மன அழுத்தம்,மனச்சோர்வு,கோபம் போன்றவை ஏற்படக் கூடும்.இதனால் மன ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும்.
ஆண்கள் அடிக்கடி விந்து வெளியேற்றவில்லை என்றால் புரோஸ்டேட் புற்றுநோய்க்கு வழிவகுத்துவிடும்.நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடாத பெண்களுக்கு பிறப்புறுப்பு ஆரோக்கியம் குறைந்துவிடும்.
அதேபோல் பல மாதங்களாக உடலுறவில் ஈடுபடாத ஆண்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக் கூடும்.நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால் அவை பாலியல் ஆசையை குறைத்துவிடும்.நீண்ட காலம் தம்பதியர் உடலுறவில் ஈடுபடவில்லை என்றால் அது உறவை பாதித்துவிடும்.எனவே குறைந்தது வாரம் ஒன்று அல்லது இருமுறையாவது தம்பதியர் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.