தமிழகத்திடமிருந்து வரிப்பணத்தை பெற்றுக் கொண்ட ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தேவையான கல்வி நிதி விவசாய நிதி என எதையுமே வழங்காமல் உள்ளது. இது குறித்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை வெளியிடும் சமயத்தில் கேட்ட பொழுது மறைமுகமாக நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கான விதியை வட மாநிலங்களுக்கு வழங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.
சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒன்றிய நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது :-
தமிழகத்தில் உள்ளவர்கள் நாங்கள் இவ்வளவு பணம் கொடுக்கிறோம் ஆனால் நீங்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்பது போல கேட்பது தவறான காரியம் என்றும் அதற்கு உதாரணமாக சென்னை கோவை போன்ற இடங்களில் இருந்து மட்டுமே வரி வருகிறது என்றும் அரியலூர் கோவில்பட்டி போன்ற இடங்களில் இருந்து வரி கொடுக்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யாமல் இருந்து விட முடியுமா ? என கேள்வி எழுப்ப இருக்கிறார்.
இவருடைய இந்த விளக்கமானது ஒன்றிய நிதிநிலை விளக்க கூட்டத்தில் இடம்பெற்ற தமிழர்களுக்கு அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்திருக்கிறது. ஏனெனில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மறைமுகமாக தமிழகத்தில் இருந்து வசூலிக்கப்பட்ட வரிகளை வைத்து வட மாநிலத்தவருக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு விட்டதாகவும் இனி தமிழகத்திற்கு கல்வி நிதி விவசாய நிதி என எந்த ஒரு நிதியும் வழங்கப்பட மாட்டாது என்பதை சுட்டிக்காட்டி இருப்பதாகவும் பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.