திமுக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டதா? தமிழக பாஜக தலைவர் வெளியிட்ட அறிக்கை!
கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்ன சேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி இறந்த சம்பவம் நேற்று வன்முறையாக வெடித்தது. அந்தப் போராட்டத்தில் சுமார் 500க்கும் இளைஞர்கள், மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் போராட்டம் வன்முறையாக வெடித்த காரணத்தால் கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கள்ளக்குறிச்சி சம்பவம் மூலமாக தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இறந்துவிட்டனர் எனவும் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் திமுக அரசு கூறி இருக்கிறது எனவும் கூறினார்.
மேலும் உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளனர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.மேலும் மாணவியின் தாயாரை சென்று பார்க்க நேரமில்லாதவராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் உள்ளார் என கே அண்ணாமலை கூறினார். மேலும் இதனை இந்த ஆட்சியில் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது எனவும் இந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும் தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் போன்ற பகுதிகளை சேராதவர்களாக இருக்க வேண்டும் என்றும் கே அண்ணாமலை அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.