எதையுமே செய்யல உயிர் போனதுதான் மிச்சம்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

0
90

கள்ளக்குறிச்சி அருகே ஏற்பட்டிருக்கின்ற கலவரத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.அவர் வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, சின்னசேலம் அருகே 12ம் வகுப்பு மாணவி பள்ளியின் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியான அவருடைய இறப்பில் மர்மம் உள்ளது என்று தெரிவித்து மாணவியரின் தாயார் புகார் வழங்கியிருக்கிறார்.

விசாரணை செய்து அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் குற்றவாளியின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்பில்லை.

காவல் துறையினர் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோரின் அலட்சியத்தாலும், மாணவிக்கு நீதி கிடைக்காததாலும், சம்பந்தப்பட்டவர்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதற்கு முதலமைச்சர் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து போய்விட்டது. மாணவியர் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. காவல்துறை செயலிழந்து கிடக்கிறது.

காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஒரு சாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் பேட்டி அளித்த அவர் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியை 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். மாணவியின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை போக்காததால் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கிறது.

திமுக சொன்னதை செய்தது இல்லை முதல்வரும் அவருடைய மகனும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்து என்று தெரிவித்தார்கள்.

எதையும் செய்யவில்லை பலர் உயிரிழந்தது தான் மிச்சம் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.