மழையால் வாகனம் சேதமடைந்து விட்டதா?? இவ்வாறு செய்து இன்சூரன்ஸ் தொகை பெற்றுக்கொள்ளுங்கள்!!
ஒவ்வொரு வருடமும் ஏராளமான இயற்கை பேரிடர்களால் மக்களுக்கு பல்வேறு வகையில் அதிக அளவிலான சேதங்கள் ஏற்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் வாகனம் சேதமடைவது ஆகும்.
மழை காலங்களில் வெள்ள நீரால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைகிறது. மழைக் காலங்களில் அடிக்கடி இது போன்ற சேதங்கள் வாகனங்களுக்கு ஏற்படுகிறது.
இதை சரிசெய்ய தான் இன்சூரன்ஸ் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் முழு தொகையை அளித்து வாகனத்தை சரி செய்வதற்கு மாற்றாக காப்பீடு தொகையை பயன்படுத்தி வாகனங்களை சரி செய்து கொள்ளலாம்.
அதை எவ்வாறு செய்வது அதற்கான முறைகள் என்ன என்று இங்கு அறிந்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் சேதமடைந்த வாகனத்தின் புகைப்படம் மற்றும் வீடியோவை காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும்.
சேதம் அடைந்த வாகனத்தை பற்றி முதலில் காவல் துறையில் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்வது இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும்.
வாகனம் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அதில் குறிப்பாக வாகனத்தின் பதிவு எண், காப்பீடு எண், புகைப்படம் என அனைத்து தகவல்களையும் சேகரித்து வைக்க வேண்டும்.
நிறுவனத்துடன் சேர்ந்து வாகனத்தின் சேதாரத்தை கணக்கிட வேண்டும்.
இதை அனைத்தையும் பின்பற்றி வர உடனடியாக காப்பீடு தொகை கிடைக்கும். இந்த தொகையானது மொத்தமாகவோ அல்லது படிப்படியாகவோ அனைவருக்கும் கிடைக்கும்.