2025 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தினுடைய பட்ஜெட் ஆனது தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் மகளிர் உரிமை தொகையை குறித்து சில முக்கிய முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி யார் யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என்பது போலவும் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான விதிமுறைகள் என்ன என்பதை பற்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதலில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க என்ன விதிகள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இ சேவை மையம் அல்லது ஆன்லைன் மூலம் மகளிர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் பரிசீலனை செய்யப்பட்டு உங்களுடைய விண்ணப்பங்கள் தகுதி உடையதாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தகுதியற்ற விண்ணப்பங்களுக்கான விவரங்கள் :-
✓ உங்கள் ரேஷன் கார்டில் இரண்டு பெண்களின் பெயர்கள் உள்ளது என்றால் ஒரு பெண்ணுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் மற்றொரு பெண்ணுக்கு முதலில் உரிமை தொகை கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ ஒருவேளை ஒரே வீட்டில் இருக்கக் கூடிய இரண்டு பெண்கள் தனித்தனியே ரேஷன் அட்டைகள் வைத்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது
✓ கள ஆய்வின்போது ஒரு வீட்டில் இரண்டு ரேஷன் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்தால் இரண்டாவதாக பயன்படுத்தப்படும் ரேஷன் கார்டு நீக்கம் செய்யப்படும்
✓ மத்திய மற்றும் மாநில அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறக்கூடியவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காது
✓ அரசிடம் இருந்து வேறு ஏதேனும் உதவித்தொகையை பெறக்கூடியவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்காது
✓ அரசு வேலையில் இருக்கக்கூடிய கணவர்களின் உடைய மனைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது
✓ அரசு ஊழியராக பணியாற்றி வரக்கூடியவர் புதிய ரேஷன் அட்டையை பெரும் பட்சத்தில் அவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்காது