தொடர் புகைப்பழக்கத்தால் உங்கள் நுரையீரலில் நச்சு கழிவுகள் தேங்கிவிட்டதா? இந்த ட்ரிங்க் குடிச்சி பலன் பெறுங்கள்!!

Photo of author

By Divya

தொடர் புகைப்பழக்கத்தால் உங்கள் நுரையீரலில் நச்சு கழிவுகள் தேங்கிவிட்டதா? இந்த ட்ரிங்க் குடிச்சி பலன் பெறுங்கள்!!

முந்திய ஆண்டுகளில் ஆண்களிடம் மட்டும் காணப்பட்ட புகைப்பழக்கத்திற்கு இன்று பெண்களும் அடிமையாகி வருகின்றனர்.புகைபிடித்தலால் உடலிலுள்ள நுரையீரல் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றது.

இதனால் நுரையீரல் புற்றுநோய்,வாய் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு புகைப்பழக்கம் உள்ளவர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர்.நீங்கள் நீண்ட காலமாக புகைபிடிக்கிறீர்கள் என்றால் அது உங்களை ஆஸ்துமா நோயாளியாக மாற்றிவிடும்.

உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் தொடர்ந்தால் நுரையீரலில் கழிவுகள் தேங்கி தொற்றுகள் உருவாகத் தொடங்கிவிடும்.எனவே புகைத்து புகைத்து கெட்டுப்போன உங்கள் நுரையீரலை மீண்டும் ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வர கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பானத்தை தினமும் குடித்து வர வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)மெல்லியாக நறுக்கிய முலாம்பழத் துண்டுகள்
2)மெல்லியதாக நறுக்கிய எலுமிச்சை துண்டுகள்
3)புதினா இலைகள்
4)மெல்லியதாக நறுக்கிய இஞ்சி துண்டுகள்
5)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கண்ணாடி பாட்டிலில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கி அதில் சேர்க்கவும்.பிறகு முலாம்பழம் ஒரு பீஸ் எடுத்து மெல்லிய துண்டுகளாக நறுக்கி அதில் சேர்க்கவும்.

பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி தண்ணீரில் சேர்க்கவும்.இறுதியாக 10 புதினா இலைகளை அதில் போட்டு நன்கு கலந்து விடவும்.இந்த பானத்தை 2 முதல் 3 மணி நேரத்திற்கு பின்னர் குடிக்கவும்.இவ்வாறு தினமும் குடித்து வந்தால் நுரையீரலில் தேங்கிய நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.