பனி காலத்தில் நெஞ்சு சளி பாதிப்பால் அவதியடைபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகி நிவாரணம் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)சித்தரத்தை – ஒரு துண்டு
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:
நாட்டு மருந்து கடை,சித்த வைத்திய சாலையில் சித்தரத்தை கிடைக்கும்.இஞ்சி போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த சித்தரத்தை ஒரு காரத் தன்மை நிறைந்த மூலிகை ஆகும்.
தங்களுக்கு தேவையான அளவு இந்த சித்தரத்தை பொடி வாங்கிக் கொள்ளவும்.சித்தரத்தையை வாங்கி அரைத்தும் பயன்படுத்தலாம்.
இந்த சித்தரத்தையை கொண்டு நெஞ்சு சளியை குணமாக்கும் மருந்து தயாரிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சித்தரத்தை பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
இந்த சித்தரத்தை பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் நெஞ்சில் கோரத்திற்கும் சளி முழுமையாக கரைந்து வெளியேறிவிடும்.அதேபோல் சித்தரத்தை பொடியை 10 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தாலும் நெஞ்சு சளிக்கு தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால் நெஞ்சு சளி முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:
1)வெற்றிலை – ஒன்று
2)சுக்கு – ஒரு துண்டு
3)மிளகு – ஐந்து
செய்முறை விளக்கம்:
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ளவும்.இதை உரலில் போட்டு இடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் நெஞ்சு சளி கரைந்துவிடும்.