ஒரே தலைவலியா இருக்கா? இந்த கஷாயம் வச்சி குடிங்க!! உடனே பலன் கிடைக்கும்!!

Photo of author

By Rupa

தினசரி வாழ்க்கையில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் பல உடல் நலப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.இதில் சிலருக்கு தலைவலி தொந்தரவு அடிக்கடி ஏற்படும்.இதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்துவது குறித்து சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)துளசி
2)இஞ்சி
3)கொத்தமல்லி விதை
4)வெற்றிலை
5)மிளகு
6)தேன்

செய்முறை:-

*முதலில் ஒரு வெற்றிலை மற்றும் சிறிதளவு துளசியை நீர் கொண்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

*அடுத்து ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

*பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு தேக்கரண்டி வர கொத்தமல்லி போட்டு லேசாக வறுத்து கொரகொரப்பாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

*பின்னர் நான்கு கருப்பு மிளகை உரல் அல்லது மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இதை தொடர்ந்து நறுக்கிய வெற்றிலை மற்றும் துளசியை அதில் சேர்க்கவும்.

*அடுத்து நறுக்கிய இஞ்சி,அரைத்த கொத்தமல்லி மற்றும் கரு மிளகு சேர்த்து மிதமான தீயில் சுண்டும் வரை கொதிக்கவிடவும்.

*இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் கலந்து குடித்தால் தலைவலி பறந்து போய்விடும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)வர கொத்தமல்லி
3)பனங்கற்கண்டு

செய்முறை:-

*அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு துண்டு சுக்கு மற்றும் இரண்டு தேக்கரண்டி வர கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொப்பாக அரைத்துக் கொள்ளவும்.

*பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அரைத்த கொத்தமல்லி சுக்கு பொடியை போட்டு கொதிக்க விடவும்.

*சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் தலைவலி குறையும்.