தொடர்ச்சியான தும்மல் இருக்கா? இந்த கஷாயத்தை குடிங்க!!

0
229
Have constant sneezing? Drink this concoction!!
Have constant sneezing? Drink this concoction!!

தொடர்ச்சியான தும்மல் இருக்கா? இந்த கஷாயத்தை குடிங்க!!

தொடர் தும்மலுக்கு ஒவ்வாமை தான் காரணம்.  ஏ.சி.க்கு கீழ் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூச்சு குழாயில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு தொடர் தும்மல் உண்டாகலாம். வாகன புகைகள், வீட்டை சுத்தம் செய்யும் போது ஏற்படும் தூசுகள், கழிவிலிருந்து வெளிவரும் மாசுகள், சைனஸ் பிரச்சினைகள் உள்ளவர்கள் பயணத்தின் போது ஜன்னல் ஓரத்தில் வரும் குளிர்ந்த காற்று வீசுவதால், மழையில் நனைவதால் தும்மல் பிரச்சினை வரும்.

மேலும் சளி பிடிப்பதற்கு முன்பாக தும்மல், மூக்கில் நீராக வடிய ஆரம்பிக்கும்.இது போன்று எந்த விதமான தும்மல் வந்தாலும் அதை சரி செய்ய கூடிய எளிய வீட்டு வைத்திய முறையை பார்க்கலாம்.

தூதுவளை பொடியை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அடுத்து மிளகு அரை மற்றும் ஸ்பூன், தேன் 2 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 ½ கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும் அது சூடானதும் முதலில் தூதுவளை பொடியையும், அடுத்ததாக மிளகு பொடியையும் போடவும். இரண்டையும் நன்றாக கலந்து கொதிக்க விடவும்.

ஒரு 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி விடவும். இந்த கஷாயம் சிறிது ஆறிய பிறகு இதில் 2 ஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும். இதை தொடர்ச்சியாக தும்மல் இருக்கும் போது காலை மற்றும் மாலை என இரு வேளைகள் குடித்து வந்தால் தும்மல் உடனடியாக குணமாகி விடும்.

Previous articleவண்டு மற்றும் பூச்சி கடிக்கு இனி மருந்து மாத்திரை தேவை இல்லை!! இந்த ஒரு கீரை போதும்!!
Next article3 நாள் சாப்பிட்டால் போதும் கால்சியம் குறைபாடு முதல் மூட்டுவலி வரை அனைத்தும் நிவர்த்தியாகும்!