நரம்பு சுண்டி இழுத்தல் மற்றும் கால் வலி இருக்கின்றதா? இந்த இரண்டு பொருளையும் ஊறவைத்து குடித்தால் போதும்!
நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் சரியில்லாத காரணத்தினாலும், நம் உடலில் எண்ணற்ற பிரச்சனைகள் உருவாகின்றது. அதிலும் அதிகளவு நாம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் ஒன்றாக இருப்பது கால் நரம்பு வலி, நரம்பு சுண்டி இழுத்தல், கால் மறுத்து போகுதல்.
அவ்வாறான நரம்பு பலவீனத்தை சரி செய்ய என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். நரம்பு பலவீனம் என்பது நாம் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும் பொழுது நரம்பு சுண்டி இழுப்பது தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
செய்முறை:தினமும் சமையலறையில் பயன்படுத்தக்கூடிய வெந்தயம் உடலில் உள்ள எண்ணற்ற பிரச்சனைகளை சரி செய்து தருகின்றது. ஒரு டீஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு பட்டை எடுத்துக்கொண்டு அதனை ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் நாம் ஊற வைத்துள்ள தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். அதனையடுத்து ஊர வைத்துள்ள வெந்தயம் மற்றும் பட்டையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து நமக்கு எந்த இடத்தில் நரம்பு சுண்டி இழுக்கின்றதோ அந்த இடத்தில் பத்து போட வேண்டும்.
பத்தினை 30 நிமிடம் வைத்து கழுவ வேண்டும். இதனை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து குடித்து வந்தால் நரம்பு சுண்டி இழுத்தல் கால் வலி கால் மறுத்து போகுதல் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.