இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனாத் தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளதா! மக்களே உஷார்!

Photo of author

By Parthipan K

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனாத் தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளதா! மக்களே உஷார்!

Parthipan K

Have you been infected with two-dose vaccinated coronary artery disease? People beware!

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் கொரோனாத் தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளதா! மக்களே உஷார்!

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கொரோனாத் தொற்று இரண்டாவது அலை பரவல் குறைந்துக் கொண்டே வருவதன் காரணமாக நாளை முதல் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கக்கோரி பிரிட்டன் அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் பிரிட்டன் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் தற்பொழுது ஒரு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையிலும் வைரசால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சஜித் ஜாவித் பத்து நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி குறித்து ‘ட்விட்டரில்’ வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். எனக்கு கொரோனாத் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மிக லேசான அறிகுறிகளே எனக்கு உள்ளது.எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகிறேன் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சஜித் ஜாவித்  சமீபகாலமாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும்படி கூறினார்.

தனிமையில் பிரதமர் பிரிட்டன்,பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள்.தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய அமைச்சர் சஜித் ஜாவித் சில நாட்களுக்கு முன்பு வரை பிரதமர் ஜான்சன் நிதியமைச்சர்,ரிஷி சுனக் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.இதையடுத்து இருவரும் கொரோனா நோய்த்தொற்றைப் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டார். மேலும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும் இருவரிடமும் கேட்டுக்கொண்டார்.

போரிஸ் ஜான்சன் தினமும் கொரோனாப் பரிசோதனை மேற் கொள்வதால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள மாட்டேன் என தெரிவித்தார். இந்த சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து பிரதமர் சஜித் ஜாவித் பத்து நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார் என அறிவிக்கப்பட்டது.