லட்ச கணக்கில் கடன் வாங்கி விட்டீர்களா? அதை அடைக்க இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் போதும்!!

Photo of author

By Divya

லட்ச கணக்கில் கடன் வாங்கி விட்டீர்களா? அதை அடைக்க இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் போதும்!!

Divya

Updated on:

Have you borrowed lakhs? Just do this one remedy to stop it!!

லட்ச கணக்கில் கடன் வாங்கி விட்டீர்களா? அதை அடைக்க இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் போதும்!!

இன்றைய சூழலில் கடன் வாங்குவது சாதாரண ஒரு விஷயமாக மாறிவிட்டது.கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.யாரும் வேண்டுமென்று கடன் வாங்குவதில்லை.ஏதோ ஒரு சூழ்நிலை அவர்களை கடனிற்குள் தள்ளிவிடுகிறது.எப்படியாக இருந்தால் வாங்கியதை மறுக்க முடியாது.

இன்று வட்டி தொழில் தான் சிறப்பாக நடந்து வருகிறது.எந்த நேரத்திலும் கடன் கிடைத்து விடுவதால் ஒரு சிலர் எதை பற்றியும் யோசிக்காமல் கடன் வாங்கி விடுகின்றனர்.ஆனால் அதை எவ்வாறு அடைப்பது என்று தெரியாமல் மீண்டும் ஒரு கடன் வாங்கி அதை அடைகின்றனர்.இவ்வாறு ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் என்று வாழக்கையே கடனில் மூழ்கி விடுகிறது.

எனவே லட்சக்கடனை அடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு எளிய பரிகாரத்தை வாரத்தில் வியாழன் அல்லது வெள்ளி அன்று செய்து வர வேண்டும்.இதற்கு முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளவும்.

அதை உங்கள் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் மற்றும் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்பது குறித்து மனதில் ஒருமுறை சொல்லிக் கொள்ளவும்.

பிறகு வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கையில் வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி தலையில் இருந்து பாதம் வரை பிழிந்து விடவும்.

பிறகு எலுமிச்சம் பழத்தின் தோலை தூக்கி எரிந்து விடவும்.அதன் பின்னர் தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு வாரம் ஒருமுறை எலுமிச்சம் பழத்தை தலை முதல் பாதம் வரை தேய்த்து குளித்து வந்தால் கடன் தீர வழி பிறக்கும்.