இந்தியன் ரிசர்வ் வங்கியானது கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது ரெப்கோ வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக வீடு மற்றும் கார் போன்றவற்றை EMI இல் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கிறது.
அதாவது இந்த ரெப்கோ விகிதம் குறைக்கப்பட்டதால் ரெப்கோ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசானது நடுத்தர மக்களினுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல முக்கிய திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கியின் உடைய இந்த முடிவானது நடுத்தர மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாத தொடக்கத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து நடுத்தர மக்கள் வாழ்க்கை குறித்த சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்கோ வட்டி விகிதத்தை ரிசா வங்கி குறைத்திருப்பது EMI இல் வீடும் மற்றும் கார் வாங்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்தியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.