வீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!!

0
62
#image_title

வீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!!

நம்மில் பலர் சொந்த வீட்டில் குடி இருப்போம். இல்லையென்றால் வாடகை வீட்டில் குடி இருப்போம். எந்த வீடாக இருந்தாலும் ஏதோ சில எதிர்பாராத காரணங்களால் நாம் வேறு வீடு மாறும் சூழல் ஏற்படும்.

இப்படி நாம் வீடு மாறும் போது சில விஷயங்களை முறையாக செய்யாமல் சென்று விடுவதால் கஷ்டங்கள் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.

இந்த பிரச்னைகள் நீங்க வேண்டும் என்றால் நீங்கள் குடி இருக்கும் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு குடி போகும் பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி செய்தல் அவசியம் ஆகும். இதனால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம்:-

தேவைப்படும் பொருட்கள்:-

*செம்பு

*தேங்காய்

*மஞ்சள், குங்குமம்

*பன்னீர்

*மாவிலை

*நெய்

*திரி

பூஜை செய்யும் முறை…

இது சொந்த வீடு மற்றும் வாடகை வீடு என இரண்டிற்குமே பொருந்தும். வீடு மாறப் போவதற்கு முதல் நாள் ஒரு பித்தளை கலச செம்பு, ஒரு தேங்காய் வாங்கி வாசனை நிறைந்த பன்னீரில் கழுவி மஞ்சள் குங்குமம் வைக்கவும்.

செம்பு முழுவதும் பச்சரிசி நிரப்பி அதில் சிறிது பச்சைக் கற்பூரம் மற்றும் மூன்று ஏலக்காய் போட்டுக் கொள்ளவும். பின்னர் அதன் மீது மாவிலை வைத்து நடுவில் கும்பம் போல் தேங்காய் வைக்கவும்.

அதற்கு பூ வைத்து தூப தீப ஆராதனை காட்டவும். பின்னர் “தெய்வமே, நாளை வீடு மாறப் போகிறோம். உம்முடைய இறை சக்தியை இந்த கலசத்தில் ஆவாகணம் செய்து எடுத்துச் செல்கிறோம். எங்களோடு வந்து எங்களது புது வீட்டில் கொலுவிருந்து எங்களுக்கு சகல நலனும்,
செல்வமும் தந்து ஆசிர்வதிக்க வேண்டும்” என்று மனதார சொல்லி வேண்டிக் கொள்ளவும்.

மறுநாள், பால் காய்ச்சப் போகும் போதே இதை முதலில் பத்திரமாக எடுத்துச் சென்று புதிதான சொந்த வீடு அல்லது வாடகை வீட்டில் வைத்து விளக்கேற்றி பின் மற்ற சாமி படங்களை வைத்து பால் காய்ச்சவும்.

பலரும் இப்படி செய்யாமல் பூஜை செய்த பலன்களை அங்கேயே விட்டு விடுகின்றனர். மேலே சொல்லப்பட்டது போல் செய்தால் நீங்கள் குடியேறிய வீட்டில் முன்னேற்றத்தை உணர்வீர்கள்.