உளவியல் ரீதியான பாதிப்புகளில் ஒன்று மனசிதைவு என்ற நோய்.பிரமை,இல்லாத ஒருவரை இருப்பது போன்று கற்பனை செய்து பேசுவது,காதில் ஏதோ குரல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்றவை மனச்சிதைவு நோய் என்று சொல்லப்படுகிறது.
இந்த மனச்சிதைவு நோய் மிகவும் ஆபத்தானவை ஆகும்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்காவிட்டால் நிச்சயம் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
மனச்சிதைவு நோய்:
3 படத்தில் நடிகர் தனுஷ் இந்த நோய் பாதித்தது போன்று நடித்திருப்பார்.இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை போன்றே செயல்படுவார்கள்.இது பிறவி நோய் பாதிப்பு இல்லை.
மனச்சிதைவு நோய் பாதிப்பின் அறிகுறிகள்:
1)பிரமை
2)சீரற்ற சிந்தனை
3)நடத்தையில் மாற்றம்
4)உணர்வு நிலையில் மாற்றம்
5)மாயை தோற்றம்
6)தனிமை படுத்திக் கொள்ளல்
7)அதீத கவலை
இந்த பாதிப்பை ஆங்கிலத்தில் ஸ்கிசோஃப்ரினியா என்று அழைப்பார்கள்.இது பரம்பரைத் தன்மையாலும் ஏற்படும்.
மனச்சிதைவு நோய் பாதிப்பின் தாக்கம் எப்படி இருக்கும்?
இந்த நோய் பாதிப்பு தீவிரமானால் தற்கொலை எண்ணம் தோன்றும்.அடிக்கடி தற்கொலை முயற்சி செய்ய நேரிடும்.
அடிக்கடி ஆக்ரோஷமான நிலையில் இருக்க நேரிடும்.சிறு செயல்களுக்கு அதிகமாக கோபம் வரும்.கடுமையான மன அழுத்த பிரச்சனை உண்டாகும்.தனிமை உணர்வை அதிகமாக நேசிக்கும் நிலை ஏற்படும்.
அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் போகும்.எதற்கும் சத்தமாக கத்தி பேச தோன்றும்.மற்றவர்களுடன் ஒற்றுப்போகாத நிலை.நிதானமற்ற பேச்சை வெளிப்படுத்துதல் போன்றவை மனச்சிதைவு நோய்க்கான தாக்கமாகும்.
மனச்சிதைவு நோய் பாதிப்பை தடுப்பது எப்படி?
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம்.
இந்த நோய் பாதித்தவர்கள் சிறந்த மன நல மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை வாழத் தொடங்கினால் இந்த பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.