கிராமப்புறங்களில் பல்வேறு விஷயங்களை பழமொழியோடு ஒப்பிட்டு பேசுவது அதிகம்.இதில் அபசகுனமாக வார்த்தைகளை பேசினால் உன் வாயில் வசம்பு வைத்து தேய்க்க என்று திட்டுவார்கள்.இந்த வார்த்தைக்கு பின்னால் ஆச்சர்யப்படும் காரணம் இருக்கிறது.பேசும் பொழுது வார்த்தையில் கவனம் இருக்க வேண்டும்.தவறான மற்றும் அவதூறான வார்த்தைகள் பிரச்சனையை உண்டு பண்ணிவிடும்.
இப்படி பேசுபவர்கள் வாயில் வசம்பு வைத்தாலாவது பேச்சு ஒழுங்குபடுமா என்ற எதிர்பார்ப்பிற்கு தான் இந்த பழமொழி சொல்லப்படுகிறது.வசம்பு மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள்.இந்த வசம்பை பிள்ளை வளர்ப்பான் என்றும் கூறுவார்கள்.
குழந்தைகளுக்கு சரியாக பேச்சு வர வாயில் இந்த வசம்பு வைப்பார்கள்.வசம்பை தேய்த்து வாயில் வைத்தால் குழந்தைகள் திக்கி பேசாமல் இருப்பார்கள்.பிறந்த குழந்தைகள் கையில் வசம்பு கட்டிவிடுவதை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றி வருகின்றோம்.
வசம்பை பிள்ளைகள் வாயில் வைத்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.வசம்பு பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது.நரம்பு தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் வசம்பை பொடித்து தேனில் குழைத்து சாப்பிடலாம்.
வாய் துர்நாற்றம் நீங்க வசம்பு பொடி கொண்டு வாய் கொப்பளிக்கலாம்.வயிறுக் கோளாறு நீங்க வசம்பு பொடியை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து பருகலாம்.இருமல் பிரச்சனை நீங்க வசம்பை பொடித்து தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.
வயிறு உப்பச பிரச்சனை இருப்பவர்கள் வசம்பை பொடித்து இதனுடன் சுக்கு தூள் மற்றும் தண்ணீர் கலந்து வயிற்றின் மீது பூச வேண்டும்.காயங்கள் மீது வசம்பு தூளை தடவினால் அவை சீக்கிரம் குணமாகும்.
தண்ணீரில் வசம்பு துண்டு சேர்த்து ஒரு மணி ஊறவைத்த பிறகு அந்நீரை கொண்டு குழந்தைகளை குளிப்பாட்டினால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படாமல் இருக்கும்.
வசம்பு துண்டை நெருப்பில் சுட்டு உரைத்து குழந்தைகளின் வயிற்றில் பூசினால் நோய் பாதிப்பு அண்டாது.பொன்னுக்கு வீங்கி பாதிப்பு உள்ளவர்கள் மஞ்சள் மற்றும் வசம்பு துண்டை அரைத்து கன்னத்தில் பூசினால் அவை சீக்கிரம் சரியாகும்.நெஞ்சு சளியை கரைத்து தள்ள வசம்பு பானம் செய்து பருகலாம்.