நீங்கள் மைசூர் பருப்பு யூஸ் பண்றிங்களா? அப்போ இது உங்களுக்கான அதிர்ச்சி நியூஸ்!!

Photo of author

By Divya

நீங்கள் மைசூர் பருப்பு யூஸ் பண்றிங்களா? அப்போ இது உங்களுக்கான அதிர்ச்சி நியூஸ்!!

Divya

நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டிய தானியங்களில் ஒன்றான துவரை புரதம்,வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது.துவரம் பருப்பை உணவாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

துவரம் பருப்பில் புரதம் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.துவரம் பருப்பை உட்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.துவரை உணவுகள் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.துவரை உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புகள் கரைய துவரை உணவுகளை உட்கொள்ள வேண்டும்.துவரை பருப்பில் குழம்பு,துவையல்,சட்னி போன்ற பல உணவுகள் செய்து சாப்பிட்டு வருகின்றோம்.துவரை பருப்பு போன்று இருக்கும் மைசூர் பருப்பு அதிக ஆபத்துகளை கொண்டிருக்கிறது.இந்த மைசூர் பருப்பை கேசரி பருப்பு என்று அழைக்கின்றனர்.

ரேசன் கடையில் இந்த மைசூர் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது.இந்த பருப்பு ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.குறைந்த விலைக்கு கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் இதை வாங்கி பயன்படுத்துகின்றனர்.ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பருப்பு தடை செய்யப்பட்டுவிட்டது.

இந்த மைசூர் பருப்பில் இருக்கின்ற அடர் நிறம் தான் நோய் பாதிப்புகளுக்கு காரணமாக இருக்கிறது.இந்த மைசூர் பருப்பில் காணப்படும் நிறம் நச்சுத் தன்மை வாய்ந்தவையாகும்.மைசூர் பருப்பு பயன்படுத்தினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுவிடும்.

கை மற்றும் கால் செயலிழப்பு பிரச்சனை ஏற்படும்.மைசூர் பருப்பு சாப்பிட்டால் முடக்குவாதம் அதிகமாகும்.மைசூர் பருப்பில் யூரிக் அசிட் அதிகமாக நிறைந்திருக்கிறது.இதனால் சிறுநீரக ஆரோக்கியம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் மூட்டு பகுதியில் வலி அதிகமாகிவிடும்.

மைசூர் பருப்பில் தாதுக்கள்,வைட்டமின்கள் அதிகமாக உள்ளது என்றாலும் இதை அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல பக் விளைவுகள் ஏற்பட்டுவிடும்.இந்த பருப்பை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.கடந்த காலங்களில் இந்த பருப்பின் பயன்பாடு அதிகமாக இருந்தது.

ஆனால் இதன்
ஆபத்து உணர்ந்த பின்னர் அதை உட்கொள்வதை மக்கள் தவிர்த்தனர்.ஆனால் விலைவாசி உயர்வால் தற்பொழுது இந்த பருப்பை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.முடிந்தவரை இந்த மைசூர் பருப்பு பயன்படுத்துவதை நாம் குறைத்து கொள்ள வேண்டும்.