ஏழை மக்கள் பலருக்கும் ரேசனில் இருந்து கிடைக்கும் அரிசி,சர்க்கரை,பாமாயில்,பருப்பு போன்றவை பயனுள்ளதாக இருக்கின்றது.இதில் சிலர் பாமாயிலை மட்டும் தவிர்க்கின்றனர்.பாமாயிலில் சமைத்த உணவுகளை உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும் என்று அஞ்சி பலரும் இந்த எண்ணையை ஒதுக்குகின்றனர்.
பனை மர பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தான் பாமாயில்.இன்று இந்த எண்ணையை தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.விலைவாசி உயர்வால் மலிவு விலையில் கிடைக்க கூடிய இந்த எண்ணையை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்துகின்றனர்.சிலர் ரேசன் பாமயிலை சமைக்க பயன்படுத்தவில்லை என்றாலும் பொரிக்க உபயோகின்றனர்.
மலிவு விலையில் கிடைக்கும் இந்த பாமாயிலில் எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை.மாறாக இதில் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக காணப்படுகிறது.பாமாயில் உணவை அதிகமாக உட்கொண்டால் உடலில் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்துவிடும்.இது பக்கவாதம்,மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.
பாமாயில் உணவுகளை உட்கொண்டால் மோசமான செரிமானப் பிரச்சனை ஏற்படும்.பாமாயில் உணவுகள் நீரிழிவு நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.பாமாயிலை அதிகமாக சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
பாமாயிலில் சமைத்த உணவுகளை உட்கொண்டால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டுவிடும்.பாமாயில் பித்தத்தை அதிகரிக்கும் என்பதால் இந்த எண்ணையை தவிர்த்துவிடுவது நல்லது.பித்தம் இருப்பவர்கள் பாமாயில் எண்ணையை பயன்படுத்த வேண்டாம்.
இருப்பினும் கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கிறது என்பது போல் பாமாயிலிலும் சில நன்மைகள் நிறைந்திருக்கிறது.பாமாயிலில் இருக்கின்றன பீட்டா கரோட்டின் என்ற ஊட்டச்சத்து கண் பார்வையை தெளிவுபடுத்த உதவுகிறது.பாமாயில் உணவை உட்கொள்வதால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை சரியாகிறது.வைட்டமின் ஏ சத்து குறைபாடு இருப்பவர்கள் பாமாயில் எண்ணையில் உணவு சமைத்து சாப்பிடலாம்.