நீங்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அப்போ சென்னை ஏர்போர்ட்டின் இந்த அசத்தல் வேலைவாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

நீங்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? அப்போ சென்னை ஏர்போர்ட்டின் இந்த அசத்தல் வேலைவாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இந்த பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் பணியமர்த்தப்பட உள்ளனர்.

நிறுவனம்: சென்னை சர்வதேச விமான நிலையம்

பணி: உதவியாளர்

காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கல்வி தகுதி:

உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

உதவியாளர் பணிக்கு 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.SC மற்றும் ST பிரிவினருக்கு 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்:

தேர்வாகும் நபர்களுக்கு ரூ.22,530/- மாத ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் அடிப்படையில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

http://www.aiasl.in/ என்ற இணைய தள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மே மாதம் 05 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது.