நடக்கும் போது கால் பிரண்டு சுளுக்கி விட்டதா.. இதோ இதை மட்டும் தடவுங்கள்!!

0
224
Have you sprained your foot while walking? Just apply this!!
Have you sprained your foot while walking? Just apply this!!

நாம் சில சமயங்களில் நடக்கும் போதோ அல்லது ஓடும் பொழுதோ கீழே விழ வாய்ப்பு உள்ளது. அவ்வாறு கீழே விழும் பொழுது நமக்கு கை கால்களில் அடி படும். இதனால் சுளுக்கு ஏற்படும். இந்த சுளுக்கு ஏற்பட்டால் வலி ஏற்படும். கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டால் எந்த பக்கமும் திரும்ப முடியாது.

எனவே இந்த சுளுக்கை குணப்படுத்த வேண்டும். இதை குணப்படுத்த பல வழிமுறைகள் இருக்கின்றது. அதில் பிரண்டையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

* பிரண்டை

* மஞ்சள் தூள்

* உப்பு

செய்முறை:

முதலில் பிரண்டையை எடுத்து பிழிந்து அதில் இருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பிழிந்து வைத்துள்ள பிரண்டை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய பின்னர் இதை இறக்கி ஆற வைக்க வேண்டும். இது ஆறியவுடன் எடுத்து சுளுக்கு இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும். இதை செய்தால் உடனே சுளுக்கு சரியாகி விடும்.

Previous articleதலைவலி 10 நிமிடத்தில் பறந்து போக மிளகை இப்படி யூஸ் பண்ணுங்க!!
Next articleஉயிரே போகும் பல் வலியை குணப்படுத்த வேண்டுமா? அப்போ இந்த பல்பொடி மட்டும் போதும்!