Breaking News

MBA படிச்சிருக்கீங்களா? அப்போ ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உங்களுக்காக சூப்பர் வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

MBA படிச்சிருக்கீங்களா? அப்போ ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உங்களுக்காக சூப்பர் வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Head (Corporate Communication & Marketing) பணிக்காக மொத்தம் 01 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணி: Head (Corporate Communication & Marketing)

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் MBA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 ஆண்டுகள் பணி சார்ந்த முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 55 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வங்கி விதிப்படி நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Head (Corporate Communication & Marketing) பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/careers/current-openings என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750/- என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய இறுதி நாள் 09-04-2024