பெஞ்சல் புயலின் தாக்கத்தினால் விழுப்புரம் மாவட்டம் கடும் பாதிப்பை மேற்கொண்டு இருந்தது. விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள 18 கிராம மக்களும் நிதி அடிப்படையில் பல்வேறு சிரமங்களை அனுபவித்துள்ளனர். இவர்களுக்கு எந்தவொரு நிவாரண நிதியும் வந்தடையவில்லை என்ற ஆதங்கத்தில் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி, 2024 அன்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அன்று அவர்களை சமாதானம் செய்ய, வனத்துறை அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார். அவர் மற்றும் அவருடன் சேர்ந்த ஆட்கள் மீது கிராம மக்கள் சேற்றை வைத்து தாக்கியுள்ளனர். இதன் தொடர்பாக கிராம மக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அமைச்சர் வலியுறுத்தியிருந்த நிலையிலும், போலீசார் கிராம மக்களுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து கொண்டே உள்ளனர் என்று செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் அப்போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து வந்துள்ளனர். தப்பிக்க முயன்றவரை துரத்தி சென்று கைது செய்துள்ளனர். இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். இதனை குறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், தமிழகத்தில் மக்களாட்சி நடைபெறுகிறதா! இல்லை போலீசார் ஆட்சயா? சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துரத்தி சென்று பயங்கரவாதியைப் போல் கைது செய்ததை மன்னிக்க இயலாது. அமைச்சர் அவமதிக்கப்பட்டுள்ளார் என்பதற்காக அடக்குமுறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது மூலம் ஆட்சியாளர்களின் வன்மம் வெளிப்படுகின்றது என்று அவர் கூறியுள்ளார். மேலும், தொடர்ச்சியாக இதையெல்லாம் மக்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள்!! என்று எச்சரித்துள்ளார்.