இவன் பெரிய ஹீரோ தான்! பைக் திருடி சென்ற சிறுவனை தூண்களில் கட்டி வைத்த பொதுமக்கள்!!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள சுற்று வட்டார பகுதியில் சில நாட்களாக இரு சக்கர வாகனம் தொடர்ந்து திருட்டு போவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. புகாரின் பேரில் நகரில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் நியாய விலை கடைகளில் பொருளை வாங்குவதற்காக தன் இரு சக்கர வாகனத்தை சாலையில் விட்டு உள்ளே சென்றார்.
அந்நேரத்தில் எவரும் பார்த்திராத வண்ணம் சாதுன்யமாக ஒரு நபர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார். இக்காட்சி அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த தகவலை பரவியதை தொடர்ந்து அந்நகரில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராவையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது காந்திநகர் பார்க் வழியாக சிறுவன் ஒருவன் திருடிய வாகனத்தை அவ்வழியாக ஓட்டி சென்றதை கண்டுபிடித்தனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சிறுவனை துரத்திச் சென்று கண்ணாடி மில் அருகே மடக்கி பிடித்து விசாரணை செய்வதில் நேரு நகர் மற்றும் அண்ணா தெருவில் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டான். அச்சிறுவனை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து கால்கள் மற்றும் கைகளை இறுக்கமாக கற்றி அருகில் இருந்த கம்பத்தின் மீது கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இத்தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். மேலும் திருடனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்க அச்சிறுவனை விசாரித்த போது சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஆத்தூர் பகுதியில் சில நாட்களாக பைக்குகளை காணவில்லை என புகாரின் அடிப்படையில் இச்சிறுவனை கேட்டறிந்த போது சிறுவன் தான் தன் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
திருடி சென்ற பைக்குகளை எடுத்துச் செல்லும் போது போலீசாரிடம் மாட்டிக் கொண்டால், வாகனத்தின் ஆர்சி புக்கை எடுத்து வந்து காண்பித்து விட்டு வண்டியை மீட்டுக் கொள்வதாக சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பி விடுவானாம். அங்கிருந்து வந்த சிறுவன் மீண்டும் கைவரிசை காட்டிய போது தான் வசமாக சிக்கிக் கொண்டான். இதனையடுத்து அச்சிறுவனின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.