cricket: இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்று எழுந்து வரும் சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கவாஸ்கர்.
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சியில் ரோஹித் சர்மா சிறந்து செயல் படவில்லை என்று ஆஸ்திரேலிய தொடரில் கடைசி போட்டியில் ரோஹித் விளையாடாமல் பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. மேலும் இந்திய அணியின் நிரந்தர டெஸ்ட் கேப்டன் பும்ரா தான் என்று பல குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி தோல்வியை தழுவியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வென்றதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதற்கு முன் இந்திய அணி 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு சென்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியில் ரோகித் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக பும்ரா கேப்டன்சி செய்து சிறப்பாக செயல்பட்டார். மேலும் இந்த போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த எந்த போட்டியிலும் வெற்றி பெறவில்லை. அவர் மீண்டும் 5 வது போட்டியில் கேப்டனாக செயல்பட்டார்.
ஆனால் அவர் முதல் இன்னிங்ஸில் குறைவான ஓவர்கள் வீசி காயம் காரணமாக வெளியேறினார். இந்நிலையில் கவாஸ்கர் பும்ரா தான் அடுத்த கேப்டன் அவர் பொறுமையாக போட்டியினை கையாள்வார். எனக்கு அந்த நம்பிக்கை உண்டு என்று கூறியுள்ளார். மேலும் சில வீரர்கள் கே எல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் தான் கேப்டனாக வேண்டும் பும்ரா ஒரு வேலை காயம் காரணமாக வெளியேறினால் அவர் மீண்டு வர நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வார் என்றும் கூறி வருகின்றனர்.