இந்தியாவுக்கு எதிராக இவர்தான் நம்பர் 1..டிராவிஸ் ஹெட் இல்லை!! எனக்குன்னே வருவிங்களா!!

Photo of author

By Vijay

cricket: இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்ததில் முதலிடத்தில் டிராவிஸ் ஹெட் இல்லை யார் அந்த முக்கிய வீரர்.

இந்திய அணி ஆஸ்திரேலியா அணி உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில்  தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி  பெற்றது.

இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ள நிலையில் ஆனால் இந்திய அணி மூன்றாவது போட்டியில் கட்டாயம் வெற்றி  பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் அடித்தது. இந்திய அணி தொடர்ந்து களமிறங்கி விளையாடி வருகிறது.

இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிக சதம் அடித்தவர்களில் தற்போது டிராவிஸ் ஹெட் இரண்டு போட்டிகளில் இரண்டு சத்தங்கள் விளாசினார். ஆனால் ஆஸ்திரேலிய அணி ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் தான் இதுவரை இந்திய அணி க்கு எதிராக 15 சதங்கள் அடித்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக அதிக சதமடித்தவர்களில் இவர்தான் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். இந்திய அணி களமிறங்கி பேட்டிங் செய்து வரும் நிலையில் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது இந்திய அணி.