cricket: இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்சி மட்டும் இல்லையென்றால் அவர் அணியில் இருக்கவே மாட்டார் ரசிகர்கள் கடும் விமர்சனம்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா மோசமான நிலையில் விளையாடி வரும் நிலையில் மூன்றாவது போட்டியில் களமிறங்கிய உடன் மூன்றாவது போட்டியானது மழை காரணமாக முடிவடைந்துள்ளது. மேலும் நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் மொத்த இன்னிங்ஸில் விளையாடி 92 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் விளையாடி வருகிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. மேலும் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வென்றுள்ளது. இரு அணிகளும் சம நிலையில் உள்ளதால் மூன்றாவது போட்டியின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்பு இல்லாமல் விளையாடி வருவதாக ரசிகர்கள் கடுமையான விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
மேலும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. ரோஹித்துக்கு கேப்டன்சி மட்டும் இல்லாமல் இருந்தால் பேட்ஸ்மேனாக அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.