இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்தது. இந்திய அணி நியூசிலாந்து உடன் படுதோல்வியை தழுவியதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலிய தொடரில் மொத்தம் உள்ள 5 போட்டிகளில் 4 போட்டிகள் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருந்தது.
இருப்பினும் இந்திய அணி மொத்த போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி வாய்ப்பை தவறவிட்டது. இந்நிலையில் இந்த தொடரின் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு நம்பிக்கை நாயகன் கிடைத்துள்ளார் அவர்தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவரை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஜெய்ஸ்வால் போட்டி முடிந்த பின் x தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில் அவர் இந்த ஆஸ்திரேலியா தொடர் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். ஆனால் எங்களுக்கு நாங்கள் நினைத்தபடி அமையவில்லை. எனினும் நாங்கள் முழு முயற்சியுடன் மீண்டு வருவோம். உங்கள் ஆதரவிற்கு நன்றி என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த உஸ்மான் கவாஜா நான் உங்கள் வேலையை விரும்புகிறேன் சகோ என்று கூறியுள்ளார். மேலும் மைக்கேல் வாகன் நீங்கள் உண்மையில் சூப்பர் ஸ்டார் என்றும் நான் உங்கள் ஆட்டத்தை மிகவும் ரசித்தேன் என்றும் கூறியுள்ளார்.