இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாற்றம் நிலவி வருகிறது. இதில் இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக இந்த தொடரில் விளையாடிய கே எல் ராகுல் கடந்த கடைசி போட்டியில் 3 வதாக களமிறக்கப்படுவார். அதனால் அவரால் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும்.
இந்நிலையில் ரோஹித் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கும் பட்சத்தில் மூன்றவதாக களமிறங்கும் கே எல் ராகுல் 6 வதாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கடந்த போட்டியில் மட்டுமல்லாமல் அனைத்து போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் 4 வது போட்டியில் சதம் விளாசினார். இந்நிலையில் அடுத்த போட்டியில் அவர்தான் 6 வதாக களமிறங்குவார் என கூறப்பட்டு வருகிறது.