சிம்புவின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் இவர் தானாம்!

Photo of author

By Parthipan K

சிம்புவின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் இவர் தானாம்!

சிம்பு நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல  வரவேற்பை பெற்று மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. வசூலிலும் வாரி குவித்தது. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது, “மஹா, வெந்து தணிந்தது காடு, பத்து தல மற்றும் கொரோனா குமார்” ஆகிய படங்கள் சிம்புவின் கைவசம் உள்ளன.

இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், அதை தொடர்ந்து, மார்ச் மாதத்தில் சிம்பு நடிப்பில் பத்து தல படத்தின் படப்பிடிப்பு பணிகளை துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பத்து தல படத்தில் நடித்து முடித்த பிறகு சிம்பு அடுத்ததாக கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார். கொரோனா குமார் படத்தில் அதிதி ஷங்கர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார். மேலும், இந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதில், இந்த படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடிக்க ஃபகத் ஃபாசில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் இந்த படத்தின் கதை குறித்து கூறியதாகவும், படத்தில் அவருக்கான கதாபாத்திரம் மிகவும் பிடித்து போனதாகவும் எனவே அவர், இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.