ரஜினியின் ‘ சிவாஜி’ படத்தில் வில்லனுக்கு முதல் சாய்ஸ் இவர் தான்! ரஜினியை விட அதிக சம்பளம்!

0
311
#image_title

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்க கூடியவர் என்றால் அது ரஜினிகாந்த் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் 96 மற்றும் 97 களில் ரஜினிகாந்த் விட அதிகமான சம்பளம் வாங்கியவர் ராஜ்கிரன்.

 

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என நான்கு வேலையை செய்தவர் ராஜ்கிரண்.

 

ராஜ்கிரண், என் ராசாவின் மனசிலே படத்தில் நடிகராக அறிமுகமானார். படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி பெரும் வரவேற்பை பெற்றது. விநியோகஸ்தராக வலம் வந்த ராஜ்கிரண், ஒரே படத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக மாறினார்.

ராஜ்கிரண் தற்சார்பும், தனிக்கொள்கையும் கொண்ட பெருமித மனிதர். இப்பொழுதும் எலும்பு கடிக்க வேண்டும் என்றால், ராஜ்கிரனை போல கடிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் உண்டு.

 

தனக்கென பொருத்தமான கதை, கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைப்பார். பொழுதுபோக்கிற்கு ஏதாவது ஒன்று நடிப்போம் என்று நடிக்க மாட்டார். பணத்திற்காக அவர் நடிக்க மாட்டார்.

 

அது 1997. ராஜ்கிரண் முழு வீச்சில் இருந்த சமயம். ‘என் ராசாவின் மனசிலே’, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘அரண்மனைக்கிளி’ என தொடர்ந்து அதிரடி வெற்றிகள். அப்பொழுது ராஜ்கிரண் உச்ச நட்சத்திரமாக இருந்தார்.

 

அப்போது குஷ்புவும், வினிதாவும் கதாநாயகிகளாக நடிக்க ‘பொண்ணு விளையிற பூமி’ என்ற படம் திட்டமிடப்பட்டது.

 

அந்தச் சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் ஒரு கோடி. பொண்ணு விளையிற பூமி யில் ராஜ்கிரண் 1.10 கோடி சம்பளமாக வாங்கினார்! பொண்ணு விளையிற பூமி’ படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தது.

 

ராஜ்கிரன் நடிப்பில் அடுத்த வெளிவந்த இரண்டு படங்கள் மாணிக்கம் , பாசமுள்ள பாண்டியரே, இரண்டு படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தோல்வியே தழுவியது.

 

பொண்ணு விளையிற பூமி அந்தப் படமும் தோல்வியடைந்தது.

 

விநியோகஸ்தராக சினிமா வாழ்க்கையை துவங்கிய ராஜ்கிரண், அந்த படத்தின் விநியோகஸ்தத்தில் கடுமையான வார்த்தைகளை எதிர்கொண்டார்.

 

இந்தப்படமும் தோல்வி. தொடர் தோல்விகள் மூலம் ராஜ்கிரணின் மார்கெட் போனது.

 

பலவருடங்களுக்கு பின்னர் ராஜ்கிரண் ‘அந்த 1.10 கோடி சம்பளம்’ பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்தார்.

 

ரஜினி படப்பெட்டிகளை வண்டியில் சுமந்து, தியேட்டர்களில் சேர்த்து, ரசிகர்களுடன் விசிலடித்து அலறவிட்டவர் ராஜ்கிரண்.

 

“ரஜினிகாந்த் அப்போது ஒரு கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். அவரைவிட அதிகமாக வேண்டும் என்று ஒரு கோடி பத்து லட்சம் கேட்டு வாங்கினேன்” என்று அந்த பேட்டியில் சொன்னார் ராஜ்கிரண்.

 

அவரது நடிப்பில் தயாரான சிவாஜி படத்தில், சுமன் நடித்த வில்லன் வேடத்துக்கு முதல் சாய்ஸாக ராஜ்கிரணை அணுகினார்கள்.

 

அது ராஜ்கிரண் ஓராண்டாக எந்த படமுமில்லாமல், பெருத்த பண கஷ்டத்தில் இருந்த காலம்.

 

மூன்று கோடி வரை கடனில் மூழ்கியிருந்தார் ராஜ்கிரண்.

 

பெருந்தொகை ஒன்றை சம்பளமாக கொடுப்பதாக சொல்லி படக்குழு ராஜ்கிரணை அணுகி உள்னர்.

 

‘வில்லன் வேடங்களில் நடிப்பதில்லை’ என்று ஒரு வார்த்தையில் மறுத்து விட்டார் ராஜ்கிரண்.

 

 

Previous articleரஜினிகாந்திற்கும் ஆச்சி மனோரமா அவருக்கும் என்ன சண்டை?
Next articleதுரைமுருகனுக்கும் எம்ஜிஆருக்கும் என்ன சம்பந்தம்! பின் ஏன் அப்படி செய்தார்?