துரைமுருகனுக்கும் எம்ஜிஆருக்கும் என்ன சம்பந்தம்! பின் ஏன் அப்படி செய்தார்?

0
183
#image_title

எம்ஜிஆருக்கும் துரைமுருகனுக்கும் என்ன சம்பந்தம் துரைமுருகனுக்கு ஒன்றென்றால் எம்ஜிஆர் பதறுகிறார் ஏன்? அப்படிப்பட்ட ஒரு சம்பவ நிகழ்ச்சியை தான் பார்க்கப் போகிறோம்.

 

எம்ஜிஆர் முதலமைச்சராக ஆட்சி செய்த காலம் அது. சட்டமன்றத்தில் துரைமுருகன் அவர்கள் எம்ஜிஆரையும், அவரது ஆட்சியையும் அரசு செய்யாத உதவிகள் என அனைவரையும் விட்டு விளாசிக் கொண்டிருந்தாராம்.

 

ஆளும் கட்சியை… குறிப்பாக முதல்வர் எம்ஜிஆரை விமர்சித்து, துரைமுருகன் வாதங்களை ஆணித்தரமாக எடுத்து வைத்து, அரசின் நடவடிக்கைகளைத் துவைத்து எடுத்து வந்தாராம். அதிமுக உறுப்பினர்களோ துரைமுருகனை பழி வாங்க வேண்டும் என்று சீறிப்பாய்ந்து கொண்டிருந்தனர்.

 

துரைமுருகன் இவ்வளவு கேவலமாக பேசினாலும், எம்ஜிஆர் அவரை புன்முறுவலோடு பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தாராம்.

 

துரைமுருகன் பங்கேற்று அரை மணி நேரம் எதிர்க்கட்சி அரசை விட்டு விளாசி கொண்டு இருந்தாராம். சபாநாயகர் உங்களுடைய நேரம் முடிந்து விட்டது என்று, சொல்லியும் அவர் ஆவேசமாக எதிர்க்கட்சியை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தாராம்.

 

திடீரென்று தனது உரையை முடித்துக் கொண்டவராக, சபையை விட்டு வெளியே வந்தார். வெளியில் எதிர்க் கட்சிகளுக்கான லாபி எனப்படும் இடத்திற்கு அவர் வந்தபோது திடீரென்று மயங்கித் தரையில் விழுந்திருக்கிறார். அங்கிருந்தவர்கள் எல்லாம் கூச்சலிட செய்தியாளர்கள், கட்சியினர், என அனைவரும் துரைமுருகனை நோக்கி ஓடினர். இதை கவனித்த எம்ஜிஆர், சட்டசபையில் ஒருவரை அழைத்து என்ன விஷயம் என்று கேட்டுள்ளார்.

 

துரைமுருகன் மயங்கி விழுந்தார் என கேள்வி கேட்டதும் எம்ஜிஆர் ஒரு கணம் நிற்கவில்லை. ஓடிப்போய் அங்கிருந்த லாபியில் படுத்திருந்த துரை முருகனை பார்த்து, கீழே அமர்ந்து அப்படியே துரைமுருகன் தலையை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டாராம்.

 

தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, துரைமுருகனை கன்னத்தில் தட்டி, முகத்தில் தண்ணீரை பீச்சி அடித்து, தனது கைக்குட்டையால் துரைமுருகனின் முகத்தை துடைத்துவிட்டு, கண்களை தடவி அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார் எம்ஜிஆர்.

 

உடனே, மருத்துவ குழு அங்கே வர அவரின் உடல் நிலையை சரிபார்த்த பிறகு,அவரின் ஆவேசம், அலறல், மூச்சிரைக்கும் சத்தம், அவருக்கிருந்த உடல்நிலைக் கோளாறு ஆகியவற்றால் மயங்கி விழுந்திருக்கிறார். அவரின் உணர்ச்சி வசப்பட்ட உரை காரணமாக உடலில் ரத்தக் கொதிப்பு அதிகரித்திருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

அரை மணி நேரம் முன்பு எதிர்க்கட்சிக்காரரான எம்ஜிஆரை அப்படி போட்டு விளாசி விட்டு, உடனே எம்ஜிஆர் இத்தகைய காரியத்தை செய்ததும் இப்படிப்பட்ட ஒரு மனிதரா எம்.ஜி.ஆர் என்று எண்ணும் அளவிற்கு அங்குள்ள அனைத்து கட்சிகளும் செய்தியாளர்களும் வியந்து போய் விட்டார்கள்.

 

ஏன் இவ்வளவு கரிசனம் துரைமுருகன் மீது என்று பேச தொடங்கியுள்ளனர். துரை முருகன், எம் ஜி ஆரின் ஸ்காலர்ஷிப் கல்வி தொகையில் எம் ஜி ஆர் ஆதரவோடு படித்தவர். சொல்லப் போனால் வளர்ப்பு மகன் போல. இருவரும் அப்போது ஒரே கட்சியில் திமுகவில் இருந்தார்கள். அதனால் எம்ஜிஆருக்கு துரைமுருகன் மேல் பாசம் உண்டு

 

author avatar
Kowsalya