இந்திய அணிக்கு முக்கிய எதிரி இவர்தான்..டிராவிஸ் ஹெட் கூட இல்லை!! வெளியான புள்ளி பட்டியல்!!

Photo of author

By Vijay

cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஸ்மித்.

இன்று மூன்றாவது நாளாக இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. மேலும் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி 87 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களிலும் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் எண்ணிக்கை 332 ஆக விளையாடி வருகிறது.

நடைபெற்று வரும் இந்த தொடரில் மொத்தம் 6 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெட் இரண்டு, ஸ்மித் இரண்டு ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் 1 சதங்கள் என மொத்தமாக 6 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி என்றால் அதிக ரன் அடிக்கும் பட்டியலில் டிராவிஸ் ஹெட் கூட இல்லை.

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே இது வரை அதிக சதங்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் 10 சதங்கள் அடித்து ஸ்மித் சாதனை படைத்துள்ளார். இரண்டாவது இடத்தில்  விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் உள்ளனர். மேலும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் நான்காவது இடத்தில் மைக்கேல் கிளார்க் உள்ளனர். அனைவரும் ஹெட் தான் தலைவலி என கூறி வரும் நிலையில் உண்மையில் ஸ்மித் தான் தலைவலியாக இருந்து வருகிறார்.