இவர்தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர்!! பிசிசிஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி ஒரு நாள் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடை பெற்று ஆஸ்திரேலியா அணி வெற்றியை ருசித்து ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதியில் கோப்பையை கை நழுவ விட்டது.இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பர் ராகுல் டிராவிட் பணியாற்றினார்.
இதையடுத்து இந்த உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சிக்கான ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வர உள்ளது. இதனால் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் மேலும் தொடர விரும்பாததால் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் தொடர விரும்பாத பட்சத்தில் அதற்கு பதில் விவிஎஸ் லக்ஷ்மணன் பதவி ஏற்பார் என்ற கூடுதல் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ராகுல் டிராவிட்டின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கான பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் அவரின் பதவி காலத்தை நீட்டித்ததோடு மட்டுமில்லாமல் டிராவிட்டின் குழுவில் இடம் பெற்றிருந்த அனைவரின் பதவி காலத்தையும் நீட்டித்து பிசிசிஐ அறிவித்து வெளியிட்டுள்ளது.