இந்திய அணி தற்போது விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் 5 வது போட்டியின் முதல் நாளில் நேற்று நடந்த கொன்ஸ்டாஸ் செய்த நிகழ்வு ஒன்று இந்திய ரசிகர்கள் கோபத்தை தூண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் அறிவுரை கூறி வருகின்றனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 5 வது போட்டியானது நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்தது.
இதனிடையே நேற்றைய நாள் முடிவடைய குறைந்த நேரம் மட்டுமே இருந்த நிலையில் ஆஸ்திரேலியா வீரர்கள் நேரம் கடத்த முயன்றனர். இதனால் பும்ரா சைகை காட்டி கவாஜா வை பேசிய போது நான் ஸ்ட்ரைக்கில் நின்ற கொன்ஸ்டாஸ் விவாதத்தில் ஈடுபட்டார். இந்த கோபத்தில் அடுத்த பந்தில் கவாஜா ஆட்டமிழந்தார். இது நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவுரை கூறியுள்ளார். இந்திய அணியில் நீங்கள் மோதக் கூடாத ஒரு வீரர் என்றால் அது பும்ரா தான். அதுவும் நீங்கள் உச்ச பட்ச பார்மில் இருக்கும் போது அந்த தவறை செய்யக்கூடாது. அது சில சமயம் நமக்கு பெரிய பிரச்சனையாக வரும். அதை டிரெஸ்ஸிங் ரூமில் மூத்த வீரர்கள் கூறுவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.