இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை பற்றி பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.
சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர்.ரகுமான். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருப்பவரும் இவரே.
மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ரகுமான் இசைக்காக உலகின் மிகவும் உயரிய விருதான ஆஸ்கர் விருதுவரை வென்றுள்ளார். இன்றும் நிறைய ரசிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் இருந்து வருகிறார். ஏராளமான இசையமைப்பாளர்கள் உருவான போதும் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கென தனி கூட்டமே உள்ளது.
ஆஸ்கர் விருது வென்ற இவருடன் பணியாற்ற வேண்டும் என்பது ஏராளமான பாடல் ஆசிரியர்கள், பின்னணி பாடகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. பாலிவுட், கோலிவுட் என பாரபட்சம் இல்லாமல் இவருடன் பணியாற்ற வேண்டும் என்பது சினிமா துறையில் பணிபுரியும் பலரின் கனவாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்த மைதான் என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் அவருடன் பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் மனோஜ் முண்டாஷிர் உடன் பணி புரிந்திருந்தார். இதுபற்றி அவர் ரகுமானுடன் பணி புரிந்தது குறித்து ஆச்சரியமான வகையில் தனது அனுபவத்தை பற்றி மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.
அவர் கூறுகையில் ஏ.ஆர்.ரகுமானை நேருக்கு நேர் முதன்முறையாக சந்தித்தது என்பது மைதான் படப்பிடிப்பின் போது தான். அவர் குழுவில் உள்ள அனைவரிடமும் மிகவும் சாதாரண மனிதராகவே ஆச்சரியப்படத்தக்க வகையில் நடந்து கொண்டார். அவருடன் பழகுவது மிகவும் எளிமையாக இருந்தது. ஆனால் அதெல்லாம் அவர் பியானோவில் உட்காரும் வரை தான். அதற்குப் பின் அவர் தன்னுடைய பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் என்று மனோஜ் ஏ.ஆர்.ரகுமானை புகழ்ந்து கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான அஜய் தேவ்கனின் மைதான் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்ற “டீம் இந்தியா ஹை ஹம்” மற்றும் மிர்ஷா போன்ற பாடல்கள் செம ஹிட் அடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.