21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை!

Photo of author

By Rupa

21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை!

நமது நாட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக சில நபர்கள் உள்ளனர்.அவர்களில் ஒருவர்தான் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.இவர் மாணவர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஊக்குவிக்கும் ஆசிரியராகவும், முன்னோடியாகவும் இருந்து வருகிறார்.அதேபோல நாளை இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை ஆணித்தனமாக கூறியவரும் இவர் தான்.அவர் மறைந்த பிறகும் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.அதனை காட்டும் வகையில் காளையர் கோவிலில் கல்லூரி மாணவர்கள் புதிய உலக சாதனையை படைத்துள்ளனர். அதாவது 21,000 தீப்பெட்டிகள் பயன்படுத்தி இரண்டு நிமிடங்கள்10 நொடிகளில் அந்த தீப்பெட்டிகள் அனைத்தையும் சரிய வைத்து ஏ.பி.ஜே அப்துல் கலாம் உருவத்தை உருவாக்கியுள்ளனர்.

இதை 49 மாணவர்கள் மட்டுமே சேர்ந்து இதனை செய்துள்ளனர்.முதலில் இருபத்தி ஒரு தீப்பெட்டி களையும் இந்த நாற்பத்தி ஒன்பது மாணவர்கள் அடிக்கியுள்ளனர்.அதனையடுத்து அந்த தீப்பெட்டி களில் ஒரு தீப்பெட்டியை தள்ளி விட்டு மற்ற அனைத்தையும் சரிய வைத்து அப்துல் கலாம் உருவப் படத்தை உருவாக்கியுள்ளனர்.இதற்காக இம்மாணவர்கள் ஆறு மாத காலம் பயிற்சி மேற்கொண்டதாக கூறுகின்றனர்.மேலும் இச்சாதனையானது சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

மேலும் அதற்கான சான்றிதழும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.மைக்கேல் கல்லூரியின் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.கல்லூரி முதல்வர் கற்பகம் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் நிமலன் நீலமேகம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் மறைந்த பிறகும் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்பதை நிரூபித்த மாணவர்களுக்கும் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.