இனி யாராவது என்னை ’இந்தி இசை’ என்று அழைத்தால் கெட்ட கோவம் வரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் திருக்கோவிலில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அமலாக்கத்துறை சொன்னதை தான் அண்ணாமலை கூறினார். டாஸ்மாக்கில் சுமார் லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த நிதி தமிழ்நாட்டிற்கு வந்தால், மாநில கடன் 36% குறையும்.
டாஸ்மாக் கடைகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. தற்போது டாஸ்மாக் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, முன்னதாக போக்குவரத்துத் துறையில் இருந்தார். அவர் ஓடறதுலயும் கமிஷன் அடிப்பார்.. போடறதுலயும் கமிஷன் அடிப்பார்” என்று விமர்சித்தார்.
கெட்ட கோவம் வரும்
இதையடுத்து மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய தமிழிசை, “எதையும் திரித்துப் பேசக்கூடாது. தற்போதைய காலகட்டத்தில் இரு மொழி போதும் எனக் சொல்லக் கூடாது. 3 மொழிகள் நிச்சயம் தேவை. இனி யாராவது என்னை ’இந்தி இசை’ என்று அழைத்தால் கெட்ட கோவம் வரும். எனக்குத் தமிழ் பத்தி பேச அனைத்து உரிமையும் உள்ளது” என்றார்.