ஆனது ஆகட்டும் விசாரணைக்கெல்லாம் ஆஜராக முடியாது.. செந்தில் பாலாஜியின் பக்கத்து பெட்டுக்கு துண்டு போட ரெடியாகும் அவரது தம்பி!!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் அவரது தம்பி என அனைவரது வீட்டிலும் வருமானவரி துறையினர் சில வாரங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இதனையடுத்து அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீடு என தொடங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை என அனைத்தையும் சோதனை செய்தனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிக்க செந்தில் பாலாஜியை அழைத்த பொழுது அவர் ஒத்துழைப்பு வழங்காததால் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது நடவடிக்கை எடுக்க தவறி இருந்தால் கட்டாயம் இவர் குற்றவாளி என கூறும் ஆதாரம் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கும்.இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் வைத்து செந்தில் பாலாஜியை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், வருமானவரி தரவுகள் எதுவும் முறையாக காணப்படவில்லை.
அது மட்டுமின்றி சட்ட விதிகளுக்கு மாறாக பண பரிமாற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்ததால் இவர் மீது கைது நடவடிக்கை எடுக்கும் சூழல் உண்டானது என தெரிவித்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், முக்கிய ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க கோரி இவரது உடன் இருப்பவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதில் முதலாவதாக இவரது தம்பி அசோக்குமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவரது தம்பி இன்று ஆஜராக வேண்டி இருந்த நிலையில் அமலாக்கத்துறையினருக்கு இது குறித்த பதில் மனு அளித்துள்ளார். அதில் நான் நேரில் ஆஜராகும் பொழுது வழக்கு தொடர்பான ஆவணங்கள் எடுத்து வரும்படி அமலாகத்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் அதனை தயார் செய்ய சட்ட ரீதியான வேலைகள் இருப்பதால் இன்று ஆஜராக முடியாது எனக் கூறியுள்ளார்.இவரும் செந்தில் பாலாஜியை போல ஒத்துழைப்பு வழங்காமல் வரும் பட்சத்தில் கூடிய விரைவில் இவர் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படும்.