அவருக்கு மட்டும் ஊரடங்கில் எங்கே டாஸ்மார்க் திறந்திருக்கிறது?

Photo of author

By Sakthi

அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்களுடன் சசிகலா பேசுவதாக நாள்தோறும் ஒரு ஆடியோ வெளியாகி கொண்டு இருக்கின்றது. அதிமுகவிற்கு தான் தலைமை ஏற்க வருவதாக அந்த ஆடியோவில் தெரிவித்திருக்கிறார் சசிகலா. இருந்தாலும் அதற்கு வாய்ப்பே கிடையாது அது நிச்சயம் நடக்கவே நடக்காது என்று உறுதி பட தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

கேபி முனுசாமி, ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்டோரும் இதே கருத்தை தான் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கருவாடு மீன் ஆனாலும் ஆகலாமே தவிர சசிகலாவிற்கு அதிமுகவில் ஒருபோதும் இடமில்லை என்று ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்திருக்கின்ற சசிகலாவின் ஆதரவாளர் தேனி கர்ணன் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இவ்வாறு பேசுகிறார் என்று சொன்னால் அவர் சாதாரணமாக இப்படி பேசுபவர் கிடையாது. நிதானமாக இருக்கும் போது அவர் இவ்வாறு பேசவே மாட்டார். அவருக்கு மட்டும் ஊரடங்கில் எங்கே டாஸ்மார்க் திறந்திருக்கிறது. என்று தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார் .

அதோடு மதுபானத்தின் போதையில் தான் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இவ்வாறு உளறிக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கின்றார் சசிகலாவின் ஆதரவாளரான தேனி கர்ணன்.