சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த முக்கிய தகவல்! சென்னை வாசிகளே உஷார்!

0
200

தமிழ்நாட்டுக்கு வெப்பச்சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்கள் தஞ்சாவூர், கன்னியாகுமரி, புதுச்சேரி காரைக்கால், போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நாளை மறுநாள் மற்றும் 13ஆம் தேதி ஆகிய தினங்களில் கடலோர மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால், போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு அளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நகர் உடைய ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை ஆக 28 டிகிரி செல்சியஸ் இருக்கும் என சென்னை வானிலை அறிக்கை தெரிவித்திருக்கிறது.

Previous articleஅவருக்கு மட்டும் ஊரடங்கில் எங்கே டாஸ்மார்க் திறந்திருக்கிறது?
Next articleசற்றே தளர்ந்த பெட்ரோல் டீசல் விலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here