நம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் காய்களில் ஒன்றான பச்சை மிளகாய்.இது கார சுவை நிறைந்த காயாகும்.நம் நாட்டில் கார உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.பச்சை மிளகாய்,வர மிளகாய் போன்ற கார பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதை அனைவரும் விரும்புகின்றனர்.
இதில் பச்சை மிளகாய் வைட்டமின் சி,வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இது தவிர பச்சை மிளகாய் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.
நாம் தினசரி பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
செரிமானப் பிரச்சனை குணமாக தினமும் பச்சை மிளகாய் சாப்பிடலாம்.பச்சை மிளகாயில் இருக்கின்ற கேப்சைசின் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
பச்சை மிளகாய் இருக்கின்ற வைட்டமின் சி சத்து சரும ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது.இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு கட்டுப்பட பச்சை மிளகாய் உட்கொள்ளலாம்.
பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த பச்சை மிளகாயை உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் கட்டுப்பட பச்சை மிளகாய் சாப்பிடலம்.இரத்தக் குழாயில் இருக்கின்ற கொழுப்புகள் கரைய பச்சை மிளகாய் சாப்பிடலாம்.தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிட்டால் இரத்தக் குழாய் ஆரோக்கியம் மேம்படும்.
ஆனால் அளவிற்கு அதிகமாக பச்சை மிளகாய் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,வயிறு எரிச்சல்,குடல் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.பச்சை மிளகாய் சாப்பிட்டால் நாக்கு எரிச்சல்,தொண்டை எரிச்சல் பாதிப்பு ஏற்படும்.எனவே பச்சை மிளகாய் விதையை மட்டும் நீக்கிவிட்டு அதன் சதைப்பற்றை வதக்கி சாப்பிடுங்கள்.